அதிர்ச்சி செய்தி! நடிகை தமன்னாவுக்கு கொரோனா வைரஸ் உறுதி! - South Indian Actress - Photos and Videos of beautiful actress

Southindian Actress

Mobile Menu

Top Ads

More News

logoblog

அதிர்ச்சி செய்தி! நடிகை தமன்னாவுக்கு கொரோனா வைரஸ் உறுதி!

Sunday, October 4, 2020

நடிகை தமன்னாவை தாக்கிய கொரோனா வைரஸ்!

பிரபல நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இன்னும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. 

திரையுலக பிரபலங்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். சமீபத்தில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணி கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மரணமடைந்தது திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், தற்போது நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் ஷூட்டிங்கில் இருந்த அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தமன்னா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.