60 வயது பாட்டியாக மாறிய நந்திதா.. கமெண்டில் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.
![]() |
https://actressbollywoodgallery.blogspot.com/ |
பா.ரஞ்சித் இயக்கத்தில், தினேஷ் நடிப்பில் வெளியான படம் அட்டகத்தி. இப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இவர் இப்படத்தைத் தொடர்ந்து எதிர்நீச்சல், புலி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆனால் முதலில் இவருக்கு எதிர்நீச்சல், அட்டகத்தி ஆகிய படங்களைத் தவிர எந்த படமும் சிறந்த படமாக அமையவில்லை. பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து இவர் நடித்த "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படம் சிறந்த படமாக அமைந்தது. அதுவும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்ற விஜய் சேதுபதியின் வசனம் ரசிகர்கள் மத்தில் பெரும் பேசப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா. அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து உள்ளார்.
அதில், புடவை கட்டிக்கொண்டு, கனகாம்பரம் பூ வைத்துக்கொண்டு பழையகாலத்து பெண் போல போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் 60 வயது பாட்டியை போல இருப்பதாக கிண்டல் அடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.